பெண்களைவிடவும் ஆண்களுக்கு இதய நோய் வர இதுவே காரணம் - ஆய்வு தகவல்
40 வயதிற்கு மேலுள்ள ஆண்கள், இதய நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு விழிப்புணர்வோடு இருக்க அறிவுறுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
இதய நோய்
சமீபத்தில் நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த 30 வயதை எட்டிய ஆண்களுக்கு இதய நோய் அபாயம் வர ஆரம்பித்து உள்ளது.
இதன் மூலம் ஆய்வு கூறுவது என்னவென்றால் சிறு வயதில் இருந்தே அதாவது ஆண்கள் பருவமடைந்ததில் இருந்து இதய நோய் வருவதற்கான அபாயத்தை குறைத்து வந்தால் அது இப்படி 30 வயதிற்கு பின்னர் இதய நோய் வராது.

இப்படி இதய நோய் வருவதற்கு காரணமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவையாகும்.
இதன்படி ஆய்வில் கூறப்படுகின்றது கடந்த சில தசாப்தங்களாக பெண்களை விட பல ஆண்கள் இதய நோயால் பாதிக்கபட்டுள்ளனர் என கூறப்படுகின்றது.
இதை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஜர்னலில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 1980களின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்த ஆய்வுக்காக, 18-30 வயதுடைய 5,100க்கும் மேற்பட்ட பெரியவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் 2020 வரை கண்காணிக்கப்பட்டபோது, பெண்களை விட ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே (5%) இதய நோய் அபாயம் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
அதிலும் ஆண்களுக்கு கரோனரி இதய நோய் பாதிப்பு (2%) அபாயம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதய பிரச்சனைகளில்தான் இந்த வேறுபாடு நிலவுவதாகவும் பக்கவாத விகிதங்களை பொறுத்தவரை ஆண் பெண் இருபாலாரும் ஒரே மாதிரியாகவே பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகின்றது. எனவே சிறு வயதில் இருந்து ஆண்கள் இதய நோய் வராமல் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |