பட்டியிலன மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன்பின்னர், சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீரா மிதுன் கேட்டிருந்தார்.
ஆனால், நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதுபோன்ற எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனிடம் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர்.
இதனிடையே, தற்போது எழும்பூர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது