ஆட்டம் காட்டிய நடிகை மீரா மிதுன்... நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க உத்தரவு!
மாடல் அழகியான மீரா மிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும், தரக்குறைவாகவும், பேசிய வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் இவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என பலர் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாக போலீசில் புகாரும் கொடுத்தனர்.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீசில் ஆஜராகாமல் மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு வீடியோ வெளியிட்டு தலைமறைவானார்.
இவரை கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். அதன் பின்னர், கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரை இன்று காலை சென்னை கொண்டு வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே வாக்குமூலம் கொடுப்பேன் என பிரச்சனை செய்து வந்தார் மீரா மிதுன்.
மேலும் தனக்கு போலீசார் உணவு கொடுக்கவில்லை, கையை உடைக்க முயன்றதாகவும் கத்தி கூச்சல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு சர்ச்சைக்கு காரணமாக இருந்த இவரின் காதலன் அபிஷேக் ஷியாம் என்பவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று மாலை போலீசார் இவரை, சென்னை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்திய நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமதி, வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என, ஓவர் ஆட்டம் போட்ட மீரா மிதுன் தற்போது நீதிமன்ற காவலில் அடிக்கப்பட்ட உள்ளார். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.