பிக்பாஸ் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குனருடன் திருமணமா? கோயிலில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!
சூப்பர் மாடல் அழகி என சொல்லிக்கொள்ளும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவார்கள். அதற்கு ஏற்ற போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சையை கிளப்பி வருவார்.
இந்நிலையில், இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமான 'பேய காணோம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனிடையே ற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குனர் அன்பரசனுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் ப்ரொமோஷனுக்காக எடுத்துக்கொண்டது எனவும் கூறப்படுகிறது.