ஆண் நண்பருடன் பதுங்கியிருந்த மீரா மிதுனை கைது பண்ணியாச்சு.. ஆனாலும் எழுந்துள்ள புதிய சிக்கல்
பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசிய மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தன்னை உலக மொடல் அழகி என கூறிக்கொள்ளும் மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்.
இந்நிலையில் சமீபத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்யக்கோரி பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீராமிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பின்னரும் ஒரு வீடியோவை வெளியிட்ட மீராமிதுன், தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விடுத்தார்.
அவரது செல்போனை எண்ணை வைத்து கேரளாவில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த போலீசார் கைது செய்தனர்.
அப்போதும், அவர் தங்கியிருந்த அறைக்குள் கட்டிலை சுற்றி சுற்றி ஓடி, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் கைது செய்த பின்னரும், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் வாக்குவாதம் செய்து வருவதால் சென்னைக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாம்.
எனினும் இன்று மதியத்துக்குள் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.