மீரா மிதுன் மீது அதிரடியாக குண்டர் சட்டம் பாய்கின்றதா? வெளியான பரபரப்பு தகவல்
நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாடலிங் தொழில் செய்து வந்த இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார். பின்பு ரசிகர்களிடம் பிரபலமான இவர், படவாய்ப்பு இல்லாமல் தனது காதலனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பிரபலங்கள், அரசியல்வாதிகளை அவதூறாக பேசுவது, ஜாதி குறித்து பேசுவது என அடுத்தடுத்து சர்ச்சையினைக் கிளப்பினார். சமீபத்தில் குறிப்பிட்ட பிரிவியினை அவதூறாக பேசி காணொளி ஒன்றினை வெளியிட்ட இவர், இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கேரளாவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டு, பொலிசாரிடமிருந்து தப்பிக்க கதறிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.
தற்போது மீரா மிதுன் ஏகப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.