ஆடம்பரமில்லாத மேக்கப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மீனா! கொள்ளை அழகில் வெளியான புகைப்படம்
நடிகை மீனா ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்பு தனது சக தோழி நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த நடிகை மீனா, பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை வெளியிட்ட அவர், திரையுலகைச் சேர்ந்த நடிகைகளை சந்தித்து வரும் நிலையில், அப்புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
துயரத்தில் இருந்துவந்த மீனா தற்போது அதிலிருந்து மீண்டு வரும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் நடிகை ராதிகா இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சிக்கு மீனா சென்றுள்ளார். அங்கு ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இருவருடன் பல பழம்பெரும் நடிகைகள் கலந்து கொண்டதுடன், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகை சினேகாவும் கலந்து கொண்டுள்ளார்.
கொள்ளை அழகில் மீனா
ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ள மீனா, அங்கு ரம்யாகிருஷ்ணன், சினேகா மற்றும் சக தோழிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மீனா.
மீனா வெளியிட்டுள்ள பதிவில், 'உறுதியான, புத்திசாலி மற்றும் தைரியமான அழகிய பெண்மணி ராதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். திரையுலகில் 44 ஆண்டுகளை கடந்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
கணவரை இழந்த நிலையில், பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா கடந்த வாரம் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் மிகவும் சிம்பிளாக காணப்பட்டார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பழைய மீனாவாக அட்டகாசமான அழகுடன் காணப்படுகின்றனர். குறித்த புகைப்படத்தினை இங்கு காணலாம்.

