நடுக்கடலில் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய மீனா- யாரெல்லாம் இருக்காங்க பாருங்க
நடுக்கடலில் 90ஸ் பிரபலங்கள் இணைந்து பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை மீனா அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா.
இவர், ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
டாப் நடிகைகளில் ஒருவராக இருந்த மீனா “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் தான் நடிகையாக அறிப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். இதனிடையே நடிகை மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
இப்படி இருக்கையில், சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். கணவரின் இழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது. இப்படி பல கஷ்டங்களுக்கு மத்தியில் படங்களில் பிஸியாக இருக்கும் மீனா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
நடுகடலில் பார்ட்டியா?
இந்த நிலையில், தன்னுடன் 90களில் இணைந்து பணியாற்றி பிரபலங்களுடன் இணைந்து நடுக்கடலில் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளியை மீனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பார்ட்டியில் நடிகை மீனா, சிம்ரன், சங்கீதா, பிரபுதேவா, சங்கர், கே. எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


