எப்படி முத்து படத்துல பாத்த மீனா மாதிரியே இருக்கீங்க? தெறிக்க விடும் அழகில் மீனாவின் காணொளி
நடிகை மீனா டுவிட்டரில் வெளியிட்டுள்ள அழகு காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்ததோடு, ரசிகர்களின் பல கருத்துக்களையும் பெற்று வருகின்றது.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
பரதநாட்டிய நடனக் கலைஞரான மீனா, சரளமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசும் திறனுடையவர்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
இதனால் அதீத மனஉளைச்சலுக்கு ஆளான மீனா, துக்கமான நேரத்திலும் கணவருக்காக இறுதிச்சடங்குகளை அவரே செய்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
மகிழ்ச்சியில் மீனா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் ரீ எண்ட்ரியைப் பார்த்த ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியில் மீனா கொள்ளை அழகுடன், பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வாழ்த்தியும், எப்படி முத்து படத்துல பார்த்த மீனா மாதிரியே இருக்கீங்க என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
— Meena Sagar (@Actressmeena16) May 7, 2023