இனி இந்த மாதிரி சீன்ல எல்லாம் என் பொண்ணு நடிக்கமாட்டா: கடுப்பில் சொன்னார் மீனாவின் அம்மா!
இனி இந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் மீனா நடிக்கமாட்டார் என அவரது அம்மா கூறியிருக்கிறார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா. இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.
சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். மீனாவில் கணவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
கடுப்பாகிய அம்மா
இந்நிலையில், மீனாவின் அம்மா மீனாவை சில காட்சிகளில் நடிக்க கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
மீனா நடித்த திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே இந்தத் திரைப்படத்தில் மீனா ராஜ்குமாருக்கு மனைவியாக நடித்து இறுதியில் இறந்து போயிருப்பார்.
அந்த சீனில் இறந்துப் போன மீனாவிற்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் செய்தார்களாம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் அம்மா பார்த்து கதறி அழுதாராம்.
என்ன என் பொண்ண வச்சு இப்படியெல்லாம் படம் எடுக்கிறீங்க? எனக்கு முன்னாடியே சொல்லி இருந்தா இதற்கு நான் ஒத்து கொண்டிருக்க மாட்டேன் என்று படக்குழுவினரிடம் தகராறு செய்து இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் எடுக்க வேண்டாம் மீனா நடிக்கவும் கூடாது என சொல்லி விட்டாராம்.