மம்மூட்டிக்கு மகள், காதலி, தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை.. யார் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் மம்மூட்டி நடித்துள்ளார்.
இந்நிலையில் மம்மூட்டிக்கு மகள், காதலி மற்றும் தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை யார் என்பது குறித்து பார்க்கலாம்.
அந்தவகையில், மம்மூட்டிக்கு வெவ்வேறு திரைப்படங்களில் மகளாகவும், காதலியாகவும், தாயாகவும் நடித்துள்ள தமிழ் நடிகை மீனா தான்.

1984ஆம் ஆண்டு வெளியான "ஒரு கொச்சு கதை ஆறும் பேசாத கதை" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, மம்மூட்டிக்கு மகளாக நடித்திருந்தார்.
அதன்பிறகு, 2001ஆம் ஆண்டு வெளியான "ராட்சச ராஜாவு" திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

மேலும், 2014ஆம் ஆண்டு வெளியான "பால்யகால சகி" திரைப்படத்தில் மம்மூட்டி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு மீனா ஜோடியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு தாயாகவும் நடித்திருந்தார்.
இதன் மூலம், மம்மூட்டிக்கு மகள், காதலி மற்றும் தாயாக நடித்த ஒரே தமிழ் நடிகை என்ற பெருமையை மீனா பெற்றுள்ளார்.
