குழந்தைகள் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மருந்துகள் - மருத்துவர் அறிவுரை
வீட்டில் நாம் அவசர தேவைகளுக்காக சில மருந்துகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன் பட்டியலை பதிவில் பார்க்கலாம்.
மருந்து பட்டியல்
பொதுவாக அவசர கால தேவைக்காக சில அடிப்படை மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் இது மிகவும் அவசியம்.
காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிறு உடல்நலக் குறைகள் அடிக்கடி ஏற்படக்கூடும். குளிர்காலம் மற்றும் பனிக்காலங்களில் இத்தகைய பிரச்சனைகள் அதிகமாக காணப்படும்.

இப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருந்து கிடைத்தால், குழந்தையின் நிலை மோசமாவதைத் தடுக்க முடியும். பெரும்பாலான வீடுகளில் பாராசிட்டமல் இருக்கும்.
அதனைத் தவிர, குழந்தைகளுக்காக வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மேலும் 6 முக்கிய மருந்துகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி இஎஸ் குழந்தை பராமரிப்பு மையத்தின் குழந்தைநல மருத்துவர் டாக்டர் பிரதீப் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

பாராசிட்டமல்
- குழந்தைகளுக்கு காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமலை பயன்படுத்துவோம். ஆனால் இந்த காய்ச்சலுக்காக பாராசிட்டமலை கொடுக்கும் முன், ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டரை கொண்டு குழந்தையின் உடல் வெப்பநிலை காண்பது அவசியம்.
- அதன்போது 99.5 டிகிரி F க்கு மேல் இருந்தால் மட்டும் பாராசிட்டமல் கொப்பது நல்லது. அதற்கு குறைவாக இருந்தால் கொடுக்க கூடாது. ஒவ்வொரு தடைவை பெரசிடமோல் கொடுக்கும் போதும் அதற்கு இடையில் 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
- அதுவும் ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் பாராசிட்டமலை கொடுக்கக்கூடாது. ஒருவேளை இந்த 6 மணிநேரத்திற்குள் உடல் வெப்பநிலை குறையாவிட்டால், ஈரத்துணியைக் கொண்டு துடைத்து விட வேண்டும்.
- இதை மீறி பெரசிட்டமோல் அதிகமாக கொடுத்தால் அது கல்லீரலை சேதப்படுத்தும். உங்கள் குழந்தையின் எடைக்கேற்ப உங்கள் மருத்துவர் கூறிய அளவு டோஸில் தான் கொடுக்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
சலைன் நாசல் ட்ராப்ஸ்
- குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருந்தாலோ அல்லது மூச்சுவிடும் போது கர்..கர்.. என்று சத்தம் வந்தாலோ, இந்த சலைன் நாசல் ட்ராப்ஸை பயன்படுத்தலாம். இதை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.
- அதில் மூக்கில் சொட்டு மருந்தாக அல்லது ஸ்ப்ரே போன்று பயன்படுத்தலாம். இந்த சலைன் நாசல் ட்ராப்ஸை 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளுமே வராது என்று டாக்டர் கூறுகிறார்.
ஆன்டன்செட்ரான்
- "ஆன்டன்செட்ரான் எமிசெட் என்று பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. குழந்தைகள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வை சந்தித்தால், இந்த மருந்தைக் கொடுக்கலாம்.
- இதுவும் குழந்தையின் எடைக்கேற்ப குழந்தைநல மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகமாக கொடுத்தால் பக்க விளைவு வரும்.
- குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போகும் போது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுக்களான சோடியம், பொட்டாசியம் போன்றவை அதிகமாக வெளியேற்றப்படும்.
- இந்த எலக்ட்ரோலைட்டுக்களை உடனே உடலுக்கு கிடைக்கச் செய்ய ஒரு பெரிய அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டை எடுத்து, 1 லிட்டர் நீரில் கலந்து அதை நாள் முழுவதும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
- ஆனால் இந்த நீரை 24 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். ஒருவேளை 24 மணிநேரத்தை தாண்டிவிட்டால், அந்நீரை கீழே உற்றிவிட வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
முயூப்ரோசின் ஆயின்மெண்ட்
- "குழந்தைகள் கீழே விழுந்து அடிப்பட்டுவிட்டாலோ அல்லது சிராய்ப்பு ஏதேனும் ஏற்பட்டாலோ, உடனே அப்பகுதியை நீரில் கழுவிவிட்டு, நன்கு காய வைத்து, பின் இந்த ஆன்டி-செப்டிக் ஆயின்மெண்ட்டை தடவ வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
வைட்டமின் டி ட்ராப்ஸ்
- உங்கள் வீட்டில் 1 வயதிற்குள் இருக்கும் குழந்தை இருந்தால், வைட்டமின் டி ட்ராப்ஸை தவறாமல் கொடுக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு 400 யூனிட்டுகளை கொடுக்க வேண்டும்.
- சில பிராண்ட்டுகளில் 1 மிலி-ல் 400 மிலி இருக்கும், இல்லாவிட்டால் 0.5 மிலி-ல் 400 மிலி வைட்டமின் டி இருக்கும். எனவே நீஙகள் எந்த பிராண்டை பயன்படுத்துகிறீர்களோ, அதைப் பொறுத்து இந்த மருந்தை கொடுக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |