துளசியில் டீ போட்டு குடித்தால் என்ன நடக்கும்? ஒரே இரவில் இவ்வளவு மாற்றங்களா..!
பொதுவாக துளசி செடியிலுள்ள அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தன.
இதன் காரணமாக அனைவரும் வீட்டில் அதிகமாக வளர்ப்பார்கள்.
அத்துடன் வாஸ்து தொடர்பான விடயங்களுக்கு துளசி அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.
மேலும் சிலர் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர்.
அந்த வகையில் இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
துளசியில் டீ போட்டு குடித்தால் என்ன நன்மைகள்
1. தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் பல்வேறு நோய்களை விரட்டலாம். இது போல் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை தருகின்றது. ஆகையால் வாய்த்துர்நாற்றம் உள்ளவர்கள் இதனை மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
3. துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி எம்மை நெருங்காது.
4. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலை யால் குணமடையச் செய்ய முடியும். குழந்தைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
5. சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வரவேண்டும். இதனை தினமும் தொடர்ந்தால் சிறுநீர் பிரச்சினைகள் காலப்போக்கில் தீரும்.
6. இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி கிருமி நாசினி, என பல்வேறு வியாதிகளை துளசி குணப்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |