காலையில் வெறும் வயிற்றில் பூண்டு டீ குடிக்கலாமா? மருத்துவ விளக்கம்! தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக நாம் கிரீன் டீ, கெமோமில் டீ, குங்குமப்பூ டீ மற்றும் பல வகையான தேநீர் குடித்திருப்போம்.
இவையனைத்திலும் அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களுக்கேற்ப அதன் நன்மைகளும் மாறுப்படுகின்றன.
ஆனால் பூண்டுகளை வைத்து பூண்டு டீ செய்து குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
உடலில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் போது அதனை மருந்து வில்லைகளை தவிர்த்து மூலிகைப் பொருட்களை வைத்து சரிச் செய்வது சிறந்தது.
ஏனெனின் மருந்து வில்லைகளால் காலப்போக்கில் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், காலையில் பூண்டு டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பூண்டு டீ குடிப்பதால் நன்மைகள்
1. டயட்டிலிருந்து கஷ்ப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு டீ குடிப்பது சிறந்தது. இது வயிற்றில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இதனால் அதிகமான பசி உங்களுக்கு வராது. அத்துடன் வயிற்றில் தங்கியிருக்கும் பக்றீயாக்கள் நீக்கப்படுகின்றன.
2. பூண்டு ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற உணவுப் பொருளாகும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை ( Immunity) அதிகரிக்கச் செய்யும். பிற வைரசுகளிடமிருந்தும் எம்மை காக்கின்றது.
3. பூண்டில் அல்லிசின் என்ற செயலில் உள்ள கலவை உள்ளது, இது ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால் கொரோனா போன்ற தொற்றுகளுக்கு இங்கு இடம் இல்லை.
4. அல்லிசின் முகப் பருவை ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் சரும பிரச்சினைகள் வருவது காலப்போக்கில் குறையும்.
5. பூண்டு உங்கள் தமனிகள் மற்றும் இரத்த அழுத்தத்திற்கான ( High Blood Pressure) மிகச் சிறந்த மருந்தாகும். இரத்த சிவப்பணுக்கள் பூண்டில் உள்ள கந்தகத்தை ஹைட்ரஜன் சல்பைட் வாயுவாக மாற்றுகிறது. இதனால் எந்த விதமான பயமும் இன்றி பூண்டு டீ எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |