கோவில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படம்! நெகிழ்ந்து போன பக்தர்கள்
மறைந்த நடிகர் மயில்சாமியின் இறுதிக்கிரியைக்கு பிறகு சிவன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜை அனைவரையும் அழவைத்துவிட்டது.
மயில்சாமியின் மரணம்
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் திகழ்ந்த மயில்சாமி நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார்.
தீவிர சிவபக்தரான மயில்சாமி சென்னை கேளம்பாக்கம் சிவன் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றிருந்தார். சிவ வழிபாடு முடிந்த பிறகு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்து வருகிறார்கள். இவரின் இறப்புச் செய்தியைக் கேட்டு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நேற்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் அனைவரின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றது.
சிவனுக்கு அருகில் மயில்சாமி
நேற்று முன்தினம் உயிரிழந்து நேற்று தகனம் செய்யப்பட்ட மயில்சாமி கடைசியாக சென்று வழிபட்ட சென்னை கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலில் இவருக்காக சிறப்பு பூஜை இடம்பெற்றுள்ளது.
அந்தப் பூஜையில் கருவறையில் இருக்கும் லிங்கத்திற்கு அருகில் மயில்சாமி படம் வைக்கப்பட்டு மோட்ச தீபம் ஏற்றப்பட்டிருந்தது.
அந்த கோவிலில் தான் மயில்சாமி கடைசியாக சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டிருந்தார் அதனால் தான் அவரின் படத்தை கோவிலில் வைத்து பூஜை செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை மிகவும் பாதித்துள்ளது. மயில்சாமியின் இறப்பு குறித்து அக்கோவிலில் உள்ளவர்கள் மிகவும் கண்ணீர் மல்க பேசிய விடயமும் அவருக்காக இடம்பெற்ற பூஜையும் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.