மே மாதத்தில் 12 ராசினர்களுக்கும் அதிர்ஷ்ட நிறத்தால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன?
மேஷம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் ராசியானது நெருப்பு ராசி பட்டியலில் வருகிறது.
மேலும், செவ்வாய் தைரியம், வீரியம் தரக்கூடியவர் என்பதால் இந்த மாதம் சிவப்பு மற்றும் வெள்ளை அதிர்ஷ்ட நிறமாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் சிவப்பு, வெள்ளை நிறை ஆடைகள், பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிர்ஷ்டத்தைப் பெற்றிடலாம்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்டது ரிஷப ராசி நேயர்களே, அன்பு, அழகு, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார்.
இந்த மாதத்தில் இளஞ்சிவப்பு, மற்றும் வெள்ளை நிறம் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த நிற ஆடை, பொருளை பயன்படுத்துவதன் மூலம் நற்பலன்களை அதிகமாக பெற்றிடலாம்.
மிதுனம்
ஞானத்தை வழங்கக்கூடிய புதனை ராசி நாதனாக கொண்ட மிதுன ராசியினர்களே, தொழில், வேலையில் முன்னேற்றம் அடைய இந்த மாதம் பச்சை மற்றும் நீல நிறம் அதிர்ஷ்ட நிறமாக கருதப்படுகிறது.
இந்த நிற ஆடைகளை அணிவதன் மூலம் புதிய வேலை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் பெறலாம். நீங்கள் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள்.
கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர்களே அமைதி மற்றும் குளிர்ச்சியின் சின்னமாக விளங்குபவர்கள்.
இவர்கள் மன அமைதியான நற்பலனைப் பெற்றிட வெள்ளை மற்றும் மஞ்சள் அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தலாம்.
பெண்கள் வெள்ளை நிற சுடிதார் மற்றும் ஆண்கள் வெள்ளை நிற சட்டை அணிந்து சில நல்ல வேலைகளை செய்தால், அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறும்.
சிம்மம்
சூரியனை ராசிநதனாக கொண்ட சிம்ம ராசியினர்களே.. வாழ்வில் மரியாதை மற்றும் சமூகத்தில் உயர் நிலையை அடைய குங்குமப்பூ நிறம் மற்றும் சிவப்பு நிறத்தை அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தலாம்.
எந்தவொரு முக்கியமான வேலை செய்ய வீட்டிலிருந்து கிளம்பும் போது இந்த வண்ணங்களின் ஆடைகளை அணியலாம் மற்றும் நெற்றியில் குங்குமப்பூ திலகத்தை அணிந்து கொள்ளவும்.
கன்னி
புதன் பகவானை அதிபதியா கொண்ட கன்னி ராசியினர்களே அமைதியான இயல்புடையவர்கள்.
புதனின் அருளால், ஒருவர் வாழ்க்கையில் வெற்றியை அடைந்து அறிஞராகிறார். இந்த மாதம் கன்னி ராசியினர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் அதிர்ஷ்ட நிறம் பயன்படுத்தலாம்.
இந்த வண்ணங்களை அணிவதன் மூலம், உங்கள் வேலைகளில் வெற்றியைப் பெறலாம்.
துலாம்
சுக்கிரனின் அருள் பெற்றவர்கள் துலாம் ராசியினர்களே.. சுக்கிரனால் திருமண உறவில் அன்பு, மகிழ்ச்சி நிறைய அருள்பவர்.
இந்த மாதம் துலாம் ராசியினருக்கு அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம். நல்ல பணிகளைச் செய்ய, உங்கள் உடையில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
விருச்சிகம்
செவ்வாய் கிரகத்தை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் இயல்பாக சிறிது கொடூர குணம், ஆக்கிரமிப்பு குணம் கொண்டவர்கள்.
நெருப்பு ராசியை சேர்ந்த இவர்கள் இந்த மாதம் மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறத்தை அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தலாம்.
இந்த வண்ணங்களைப் பயன்படுத்தி இந்த மாதத்தில் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியினர்களே மே மாதத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தவும். இந்த மாதத்தில் புதிய செயலைத் தொடங்கவும், செயல் வெற்றி அடைய விரும்பினால் குருவின் வழிபாடு செய்வதும், மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
இந்த நிறத்தை ஏராளமாகப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியின் ஏணியில் ஏறலாம்.
மகரம்
சனிபகவானை ராசி நாதனாக கொண்ட மகரம் மிகவும் கடின உழைப்பாளிகளாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள் செய்யத் தீர்மானித்த வேலையை முடிப்பதன் மூலம் மட்டுமே அவர்கள் அதிகாரத்தைப் பெறுகிறார்கள்.
சனியின் அருள் பெற்றிடவும், மேலும் வாழ்வில் முன்னேற்றத்தை அடைந்திட இந்த மாதம் நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் பயனடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் கருப்பு நிறத்தை அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தலாம். இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றம் அடைய வெற்றி பெற சனி பகவானை வழிபடுவதோடு நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிந்து நீங்கள் நினைத்த வெற்றியை அடைந்துவிடலாம்.
மீனம்
குரு பகவானை ராசிநாதனாக கொண்ட மீன ராசியினர் உங்கள் செயலில் உற்சாகமும், இந்த செயலிலும் சாதுரியமாகச் செயல்படுபவர்கள். எடுக்கும் வேலையில் வெற்றியைப் பெற இந்த மாதம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை அதிர்ஷ்ட நிறமாக பயன்படுத்தவும்.