கேரளா மட்டை அரிசியில் பால் பாயாசம்! ஒரே ஒரு முறை இப்படி செய்து பாருங்க
கேரளா மட்டை அரிசி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
கேரளா மட்டை அரிசியில் இன்று பால் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரளா மட்டை அரிசி - 1 கப்
- பால் - 4 கப்
- சர்க்கரை - 1 கப்
- முந்திரி, திராட்சை, பாதாம் - விருப்பத்திற்கேற்ப
- நெய் - அரை டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
கேரளா மட்டை அரிசியை நன்றாக கழுவி மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அல்லது அடிபிடித்து விடும்.
அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.

அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
மேலே வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.