இந்த தந்திரமான புதிருக்கு உங்களால் விடை கண்டுபிடிக்க முடியுமா?
கணிதம் என்பது பலருக்கு கடினமான மற்றும் அச்சுறுத்தும் பாடமாக உள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு பாடம் என்றால் அது கணித பாடம் தான்.
நீங்கள் இந்த மனதைக் குழப்பும் புதிர்களின் ரசிகராக இருந்தால், இன்று உங்களுக்கு ஒரு சவால் உள்ளது. கொடுக்கபட்டிருக்கும் இந்த சமன்பாட்டை நீங்கள் உற்று கவனித்து அதற்கான விடையை கண்டுபிடித்தால் நீங்கள் தான் சிறந்த அறிவாளி.

கணித புதிர்
92 + 3 = 73, 75 + 2 = 22, 84 + 3 = 43, 97 + 1 = ??" இந்தப் பதிவு ஏற்கனவே 2,000க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 150க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது, இந்தச் சமன்பாடுகளுக்குப் பின்னால் உள்ள குறியீட்டை உடைக்க மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் எப்போதும் போல, விஷயங்கள் அவ்வளவு எளிமையானவை அல்ல.ஒரு சிலரால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

இதுவரை உங்கள் மூளையை சோதித்து விடை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். அப்படி கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் விடை தருகிறோம். அதை வைத்து நீங்கள் இந்த விடை எப்படி வந்துள்ளது என்று சிந்தித்து பார்த்து வேறு விளையாட்டை முயற்ச்சி செய்யுங்கள்.
92+3=(9-2)×10+3=73
75+2=(7-5)×10+2=22
84+3=(8-4)×10+3=43
97+1=(9-7)×10+1=21
answer = 21
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |