மாசி மாதத்தில் இதை மறக்காம செய்திடுங்க: கோடி புண்ணியம் உண்டாம்
மாசி மாதம் என்றால் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று கூறுவார்கள்.
மகா விஸ்னுவின் அவதாரம் மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். இதனால் தான் இந்த மாதத்தில் பல சிறப்பான விஷயங்கள் செய்யப்படுகிறது.
இந்த மாசி மாதத்தில் மனிதர்கள் சில விஷயங்களை செய்தால் மனவலிமையுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்த மாசி மாதத்தில் புண்ணிய தளங்களிலும் சமுத்திர கரைகளிலும் அமிர்தம் நிரம்பி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
இதனால் தான் இந்த மாதத்தில் சமுத்திரக்கரைகளில் மனிதர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வளவு நன்மை படைத்த இந்த மாசி மாதத்தில் சில விஷயங்களை செய்தால் அது எமது வாழ்க்கையில் சிறந்த பலனை தரும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே மாசி மாதத்தில் செய்ய கூடிய விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாசி மாதம்
1. மாசி மாதத்தில் எம்மால் முடிந்த அளவுக்கு நாம் அன்னதானம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதத்தில் அன்னதானத்தின் பெருமைகளை மிக சிறப்பாக மாசி மகத்தில் கூறப்பட்டுள்ளது.
2. வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். எனவே மாசி மாதத்தில் சிவ ஆலயத்திற்கு சென்று சிவனை தவறாமல் வழிபாடு செய்து வந்தால் நமது இன்னல்கள் நம்மை விட்டு விலகும் என கூறப்படுகின்றது.
3. இந்த மாசி மகத்தில் கோலி பண்டிகை வருகிறது. இந்த மாசி மகத்தில் இறைவனை தவறாமல் வழிபாடு செய்தால் அது நமக்கு மிகப்பெரிய பலனை தரும்.
4. இந்த மாசி மாதத்தில் பெண்கள் அவர்களின் தாலி கயிற்றை மாற்றினால் அது அவர்களுக்கு நன்மை தரும் மற்றும் அவர்களின் பிணிகளை நீக்கும் என நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |