மாசி கருவாட்டின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா? ஆச்சரியம் அளிக்கும் மருத்துவ குணங்கள்
மருத்துவ பலன்கள் அதிகமாக கொண்ட மாசி கருவாடு குறித்த இன்னும் பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாசி கருவாடு
மாசி கருவாடு மருத்துவ உலகம் என்று கூறப்படுகின்றது. குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் சிறந்த உணவாக இருக்கின்றது.
கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்ற சூரை மீன்கள் மாசி கருவாடாக மாற்றப்படுகின்றது.
பொதுவாக, மீன்களை கருவாடாக உருவாக்க, அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் காயவைக்கின்றனர்.
ஆனால், சூரை மீன்கள், வேறுபட்ட முறையில் அவித்து, பிறகு காயவைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின் விளைவாக, மீனின் நிறம் அழகிய சிவப்பு பளபளப்பாக மாறி, கண்ணாடி போன்ற தோற்றம் பெறுகிறது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், உடல் உறுப்புகளை வலுப்படுத்தவும் செய்கின்றது. முன்னோர்களின் வழக்கப்படி திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த கருவாடை உணவாக வழங்குவது வழக்கமாம்.
ஏனெனில் மாசி கருவாட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால், சினைப்பை மற்றும் கருப்பை வலுவடையவும், வாதம், பித்தம், கபம் இவற்றினை கட்டுப்படுத்துகின்றது.
ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் பலமாவதுடன், ஆரோக்கியமான உணிரணுக்கள் உருவாகவும் உதவுகின்றதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |