இன்று மாசி அமாவாசை! நினைத்த காரியம் வெற்றியடைய வேண்டுமா? இந்த ஒரு பரிகாரம் மட்டும் செய்ங்க
பொதுவாக அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதை இந்து மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இன்று மாசி அமாவாசையில் கடைசி ஒரு மணிநேரம் சதயம் நட்சத்திரமாம். இந்த நட்சத்திரம் பித்ருக்களுக்கு ஏற்ற நட்சத்திரமாம்.
மேலும் அமாவசை நாளில் பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலால் நிறைந்து காணப்படுவதால், குலதெய்வ வழிபாடு, ஆன்மீக காரியங்கள் இவற்றில் ஈடுபடலாம்.
இந்த அமாவாசை தினத்தில் சோடச கலை நேரம் என்று காணப்படும். இந்த நேரத்தினை அற்புதமான நேரமாக சித்தர்கள் கூறுவதோடு, இதனை உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டால், அற்புத பலனையும் அடையலாம்.
கர்ம வினை தீர பரிகாரம்
நமது கர்ம வினையினை போக்கை சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். லட்சம் உயிர்களுக்கு அன்னம் இட்டால் கர்மவினை குறையும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
இவ்வாறு அன்னம் இடுவது சிலருக்கு வசதி இல்லாமல் கூட இருக்கலாம். மனிதர்களுக்கு மட்டுமின்றி, எறும்புகளுக்கு உணவளித்தாலே போதுமானது. இன்றைய தினம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பச்சரிசி வெல்லம் கலந்து அங்கே இருக்கும் மரங்கள் மற்றும் புற்றுக்கு அருகில் இதனை வைத்துவிட்டு வரவும்.
சோடசக்கலை வேண்டுதல்
சோடசக்கலை வேண்டுதல் என்பது அமைதியாக இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த பிரபஞ்ச ஆற்றலை நினைத்து, மனமுருகி தேவையானவற்றை நேர்மனையாக கேட்க வேண்டும்.
நேர்மறையாக வேண்டுதல் என்பது, எடுத்துக்காட்டாக நீங்கள் பணம் நிறைய சம்பாதிக்க விரும்புபவர்கள், ஏற்கனவே நிறைய பணம் சம்பாத்தித்துவிட்டதாகவும், தொழில் விருத்தி அடைந்துவிட்டதாகவும், செல்வ செழிப்பாக வாழ வேண்டும் எனவும் நேர்மறையாக நினைத்து மனமுறுகி மன ஒருமைப்பட்டு கேட்ட வேண்டும்.