சளி, ஜீரண பிரச்சனைகளுக்கு நொடிப்பொழுதில் தீர்வு தரும் குழம்பு! நீங்களும் செய்யலாம்
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜீரண பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
அசாதாரணமான நேரங்களில் செரிமான பாதையில் உண்டாகும் தடைகளால் செரிமான நீர்கள் சுரப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனால் செரிமானத்தில் தாமதம் அல்லது கோளாறுகளை குறிக்கிறது.
மேலும் அஜீரணம் இருப்பதை நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக்குறைவு போன்ற அறிகுறிக்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஏற்படும் போது நமது வீட்டிலுள்ள பொருட்களை போட்டு சூப்பரான மருத்துவ குழம்பு செய்து சாப்பிட்டால் நிரந்தரமாக வராமல் துரத்தலாம்.
அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்து குழம்பு எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - அரை கப்
தக்காளி - 3
புளி - எலுமிச்சை அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு
அரைக்கப்பதற்கு தேவையான பொருட்கள்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கண்டதிப்பிலி - 2 சிறிய குச்சி
சுக்கு - விரல் நீளத் துண்டு
வால்மிளகு - அரை டீஸ்பூன்
அரிசி திப்பிலி - சிறிதளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் அரைக்க தேவையான பொருட்கள் எனக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து பின்னர் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம் என்பவற்றை தொடர்ந்து ஒரு கப்பில் புளியை கரைத்து அதனுடன் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு என்பவற்றை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இதனையடுத்து ஒரு வாணலியில் எண்எணய் தேவையானளவு ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து பூண்டு, வெங்காயம் என்பவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் புளி கரைச்சலை ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, அரைத்து வைத்துள்ள பொடியை மேலோட்டமாக தூவ வேண்டும்.
சுமார் 5 - 10 நிமிடங்களுக்கு பின்னர் நன்றாக கிளறி இறக்கினால் மருத்துவ குணங்கள் தயார்!