சுக்கிரன்–செவ்வாய் சேர்க்கையால் சக்திவாய்ந்த யோகம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
இந்த ஆண்டின் ஜூலை மாதம் பல்வேறு ஜோதிட யோகங்கள் உருவாகுவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜூலை 29ஆம் தேதி சுக்கிரன் மற்றும் செவ்வாய் 90 டிகிரி கோணத்தில் அமைவதால் சக்திவாய்ந்த கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
அழகு, செல்வம் மற்றும் வளத்தின் காரகனான சுக்கிரனும், தைரியம், வீரம் மற்றும் வலிமையின் காரகனான செவ்வாயும் இணைந்து உருவாக்கும் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும்.

இருப்பினும், இந்த ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம், மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும்.
இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமும் மேம்படும். நீங்கள் எடுக்கும் பெரும்பாலான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
பல்வேறு வழிகளில் பணவரவு அதிகரிக்கலாம். பொருளாதார வசதிகள் மேம்பட்டு, விரும்பிய சுகவாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் உருவாகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும்.
சிம்மம்

செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம், சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் தானகவே உயரும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் மேலும் வலுவடையும்.
கன்னி

செவ்வாய் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம், கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலத்தை உருவாக்கும்.
நீண்ட நாட்களாக மேற்கொண்ட கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மன அமைதியும் நிலவும். நிதி நிலை வலுவடைந்து, புதிய வருமான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கக்கூடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |