மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
நவகிரகங்களில் உள்ள அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்ப்படுகின்றது.
அந்த வகையில், கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமான ராசி மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:16 மணிக்கு, செவ்வாய் ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் சாதகமான பலன்களை அனுபவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்தில் நுழைவது நல்ல பலன்களைத் தரும். இந்தக் காலத்தில் அவர்கள் சுறுசுறுப்பாகவும், அதிக தன்னம்பிக்கையுடனும் செயல்படுவார்கள்.
நீண்ட நாட்களாக இருந்த சில பிரச்சினைகள் தீரும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உருவாகும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்ததை விட சிறந்த முன்னேற்றம் கிடைக்கலாம்.
முன்பு செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். திருமணமானவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இதனால் சமூகத்தில் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். உடல்நலமும் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் நிறைந்த காலமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாயின் தாக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரித்து, புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |