18 மாதங்களின் பின் மேஷத்தில் செவ்வாய் : சாதக பலன்கள் எந்தெந்த ராசிகளுக்கு?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலையில், ஏற்படுகின்ற மாற்றங்களானது ராசிபலன் கணிப்பில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துகின்றது.
காரணம் கிரகங்களின் ராசி, நட்சத்திர பெயர்ச்சியும், கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

இந்தவகையில், கிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக குறிப்பிடப்படுகின்றார்.
தற்போது மீன ராசியில் பயணித்து வரும் செவ்வாய் மே 11 ஆம் திகதி மீன ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகவுள்ளார். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகளவான சாதக பலன்களை பெறும் ராசியினர் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் இடப்பெயர்ச்சியடைவதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில், பல்வேறு வழிகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படவுள்ளது.
இவர்கள் தங்களின் நிதி நிலையை உயர்த்துவதில் இந்த காலகட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செவ்வாய் ஆசியால் காரியங்களின் வெற்றியாகும்.
இந்த காலகட்டத்தில் மனவலிமை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியில நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் பெயர்ச்சியாவதால், உறவுகள் வலுவடையும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் இருந்துவந்த தடைகள் நீங்கும்
புதிய தொழில் தொடகங்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டங்கள் வெற்றியாகும். வருமானத்துக்காக புதிய வழிகள் திறக்கும்.
செவ்வாய் ஆசியால் புதிய காரியங்களை ஆரம்பபித்து வெற்றி காணலாம் என்ற தைரியம் மேலோங்கும்.
மிதுனம்

[THBAMYD
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்ல் செவ்வாய் இடப்பெயர்ச்சியாவதால், இவர்களின் தொழில் நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும் வணிகத்தில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். குறிப்பாக தொழில் மற்றும் கல்வி விடயங்களில் உறவுகளின் ஒத்துழைப்பு பலமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |