செவ்வாயால் உருவாகும் ருச்சக யோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதற்கு காரணம் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி, முக்கிய கிரகங்கள் இணைந்து உருவாக்கும் ராஜ யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகி்ன்றது.

அந்தவகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகின்றார்.
45 நாட்கள் மாத்திரமே ஒரு ராயியில் இருக்கும் போர் கிரகமான செவ்வாய் மே மாதம் 2 ஆம் திகதி தனது சொந்த ராசியான மேஷத்துக்கு இடப்யெர்ச்சி அடைவதால், ருச்சக யோகம் உருவாகின்றது.
சொவ்வாய் உருவாக்கும் ருட்சக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக பலன்களை ஏற்படுத்தினாலும், நிதி மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக யோகத்தை உருவாக்குவதால், இந்த ராசியினரின் மனநிலையில் தைரியமும் தெளிவும் பிறக்கும்.
தொழில் வாழ்க்கையில் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றத்துக்காக வழிகள் திறக்கும். நிதி நிலையில் அமோக வளர்ச்சி ஏற்படும்.
புதிய தொழிலை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தைரியம் செவ்வாயின் ஆசியால் கிடைக்கும். அதனால் புதிய வருமானத்துக்கான வழிகள் தானாகவே திறக்கும்.
மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாயால் ருச்சக யோகம் உருவாவதால், இந்த ராசியினருக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் தானாகவே உயரும். இவர்களின் ஆளுமை விருத்தியடையும்.
தொழில் ரீதியில் புதிய முயற்ச்சிகள் வெற்றியளிக்கும். பொருளாதார நிலையில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் உருவாகும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த கடன்களுக்கு முடிவுகட்டும் அளவுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாயால் ருச்சக யோகம் உருவாக இருப்பதால், இவர்களின் நீண்ட கால உழைப்புக்கான பலனை இப்போது அனுபவிப்பார்கள்.
புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். இவர்களின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.
செவ்வாயின் ஆசியால் பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயரும். அதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டும் மரியாதையும் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |