நாளை முதல் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிடத்தில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும்.
அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன், செப்டம்பர் 05ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மிதுனத்தில் செவ்வாய்-சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
மிகவும் மங்களகரமான இந்த யோகம், செல்வம், தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
அப்படி செவ்வாய்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் டாப் 5 ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 11-வது வீட்டில் செவ்வாய்–சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் மூலம் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களும், வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.இதுவரை இருந்த பணப் பிரச்சனைகள் நீங்கி நிதி நிலை உயர்வடையும்.
துலாம்

துலாம் ராசியின் 9-வது வீட்டில் செவ்வாய்–சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
ஐடி துறையினருக்கு சிறப்பான காலமாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் குறைவதுடன், தொழில் மற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு

தனுசு ராசியின் 7-வது வீட்டில் செவ்வாய்–சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு வருமான உயர்வும், வணிகர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்

மீன ராசியின் 4-வது வீட்டில் செவ்வாய்–சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் முன்னேற்றத்துடன் நல்ல லாபமும் கிட்டும்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரிடமிருந்து நிதி உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் நீண்டகால கவலைகளும் குறைந்து மன அமைதி உண்டாகும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 2-வது வீட்டில் செவ்வாய்–சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைப்பதுடன், வருமானமும் உயரும்.
தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். புதிய வழிகளில் பணவரவு கிடைப்பதுடன், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |