மனைவியை பிரிந்துவிட்டதாக சொன்ன நாஞ்சில் விஜயன்… புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!
நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என திரைத்துறை மற்றும் கலைத்துறையில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நாஞ்சில் விஜயன்.
தனது நகைச்சுவை திறமையாலும், இயல்பான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனது திறமைகளை நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாஞ்சிலின் சர்ச்சை பதிவு
அந்த பதிவில், தனது திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்துவிட்டதாகவும், மனைவியைப் பிரிந்து தனிமையில் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், திருநங்கை வைஷ்ணவி தொடர்பாகவும், “அவரது சாபம் பழித்துவிட்டது” என்ற வகையிலும் நாஞ்சில் விஜயன் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்தது. திருமண வாழ்க்கை தொடர்பாக நாஞ்சில் விஜயன் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியது.
உண்மையிலேயே அவர் மனைவியைப் பிரிந்துவிட்டாரா? இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதற்கிடையில், அந்த பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, நாஞ்சில் விஜயன் அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கினார்.
இதனால், அவரது திருமண வாழ்க்கை குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.

தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படம்
இந்நிலையில், நாஞ்சில் விஜயனின் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடையும் வகையில் புதிய புகைப்படம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதாவது, தனது 3-வது திருமண நாளை மனைவி மற்றும் மகளுடன் இணைந்து நாஞ்சில் விஜயன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்து அவர் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் கவலையடைந்திருந்த நிலையில், தற்போது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து திருமண நாளை கொண்டாடியிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது பலருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன், புகைப்படத்திற்கு லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |