கும்பத்தில் இணையும் செவ்வாய்- சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
ஜோதிட கணிப்புகளில் நவகிரங்களின் நிலையானது பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்த்திரத்துடன் கிரகநிலைகள் நேரடியான தொடர்ப்பை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகள் மாத்திரமன்றி, அரிய கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்களும் 12 ராசியினரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்துத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி சனிபவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்குள் சந்திரன் நுழையவுள்ளார்.
ஏற்கனவே கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவானும் கும்பம்த்தில் பணித்து வரும் நிலையில் இந்த கிரகங்களின் அரிய இணைப்பானது மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாக்கப்போகின்றது.
மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசியினர் நிதிநிலையில் அசுர வளர்ச்சியை காணப்போகின்றார்கள். அப்படி உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் குறித்த செவ்வாய் சந்திரனின் சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகத்தால், இவர்கள் வாழ்க்கையில் எதிர்பார வகையில் பல நல்ல மாற்றங்கள் நிகழப்போகின்றது.
குறிப்பாக இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக வளர்ச்சி உண்டாகும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்டும் வகையில், பணவரவில் அசுர வளர்ச்சி காணப்படும்.
புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.லட்சுமி தேவியின் ஆசியால் இந்த இந்த காலகட்டத்தில் புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகம் காணப்படுகின்றது.
சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் ஏற்படுவதால், இவர்களின் வாழ்வில் மகாலட்சுமி ராஜயோகம் புதிய சாதக திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் இவர்களின் மனநிலை மற்றும் சிந்தனையில் தெளிவு பிறக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் துணிவும் உண்டாகும். புதிய தொழில் முயற்ச்சிகள் வெற்றியளிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம்.
கும்பம்

கும்ப ராசியில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையானது முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாகவுள்ளதால் இவர்கள் வாழ்வில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படபோகின்றது.
நீண்ட நாட்களாகவே கைக்கு வராமல் ஏமாற்றிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற நீண்ட கால கனவு நிஜமாகும். லட்சுமியின் ஆசியால் தங்கம், வெள்ளி வாங்கும் யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். மங்களகரமான விடயங்களை செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பணம் உட்பட செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |