24 மாதங்களுக்கு பின் ருச்சக ராஜயோகம்: செவ்வாயால் ஜூன் 21வரை இந்த 3 ராசிக்கு பணமழை!
வேத ஜோதிடத்தின் பிரகரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்விலும் ஆழமாக தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பெயர்ச்சிக்கு ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்படுகின்றது.

செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். செவ்வாய் ஒரு சுழற்சியை முடிக்க 2 ஆண்டுகள் தேவைகப்படுகின்றது.
அந்த வகையில் செவ்வாய் பகவான் சுமார் 2 ஆண்டுகளின் பின்னர் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் மே 11 ஆம் திகதியன்று இடம்பெயர்ந்தார். மேஷ ராசியில் ஜூன் 21 ஆம் திகதி வரையில் பயணிப்பார்.

செவ்வாய் மேஷத்தில் பயணிப்பதால், சக்தி வாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும். தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளாதால் இவர்களின் வாழ்வில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.
தொழில் ரீதியில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட காலத்தை அனுபவிக்க போகின்றார்கள்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டையும், ஆதரவையும் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை இந்த காலகட்டத்தில் எதிர்ப்பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்குவதால் இவர்களின் தெழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிலுமே சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கும். தடைபட்ட காரியங்கள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியளிக்கும்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்கக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். நிதி நிலையில் பாரிய ஏற்றத்தை காண்பார்கள்.
மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்குவதால், இவர்களன் பொருளாத நிலையில் அமோக முன்னேற்றம் உருவாகும்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பாரியளவில் நிதி ரீதியான நன்மைகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்ச்சிகள வெற்றியளிக்கும்.
தொழில் விடயங்களில் குடும்பத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். இவர்களின் மனநிலையில், தைரியடும் தன்னம்பிக்கையும் பெருகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |