குரு-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்: ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் கிரகங்களின் இடமாற்றம் மற்றும், கிரகங்களின் இணைப்பால் உருவாகும் ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகி்ன்றது.

அந்தவகையில், எதிர்வரும் மே 5-ஆம் திகதி செவ்வாய் மற்றும் குருபகவான் போன்ற சக்திவாய்ந்த கிரகங்கள் 90 டிகிரி கோணத்தில் நேர்கோட்டில் அமையும்போது 'கேந்திர திருஷ்டி யோகம்' உருவாகிறது.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சிர ராசிகளின் வாழ்வில் பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
அப்படி கேந்திர திருஷ்டி யோகத்தால் பெருமளவில் அதிர்ஷட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த குரு செவ்வாய் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம் அதிர்ஷ்டத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கப்போகின்றது.
குறிப்பாக தொழில் ரீதியில் இந்த யோகத்தால் உச்சகட்ட முன்னேற்றத்தை பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
பணியிடத்தில் தொடர்ச்சியாகவே இருந்துவந்த சிறுசிறு பிரச்சினைகள் நீங்கி ஒரு சுமூகமான சூழல் உருவாகும். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் பெறுவதற்காக யோகம் உண்டாகும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில்,அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது.
குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்சியான நேரத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் கூடிவரும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். பல வழிகளிலும் வருமானம் வருவதற்கான வழிகள் திறக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த கேந்திர திருஷ்டி யோகத்தால் தொழில் ரீதியில் அமோக பலன்கள் கிடைக்கப்போகின்றது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்காக வாய்ப்புகள் அமையும். நிதி ரீதியில் அமோக முன்னேற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |