தமன்னாவுடன் விரைவில் திருமணம்! ரசிகைக்கு பதிலளித்த பிரபல நடிகர்
பிரபல நடிகை தமன்னாவின் திருமணம் விரைவில் ஹைதராபாத்தில் நடக்கும் என பிரபல நடிகர் விஜய் வர்மா பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.
இவர் தமிழ் பங்களில் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
அவரின் முதல் படமான கேடி படத்தில் பிரபலமாகாமல் இருந்தாலும் இவரின் அடுத்த படங்கள் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் , விஜய் சேதுபதி போன்றவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் தமன்னா சமீப காலமாக தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவருக்கு தமிழ் படங்களில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இவர் நடித்த படங்களில் பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் பேன்ற படங்கள் சிறப்பான படங்களாகும்.
சமீபத்தில் ஜீகர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 எனும் படங்களில் நடித்த தமன்னா பிஸி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் படங்களில் விலகியிருந்த தமன்னா மீண்டும் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு என்றி கொடுத்து ரசிகர்களை குதூகலிக்க வைத்தார். இந்த பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பெற்றார்.
திருமணம் குறித்த பதில்
லஸ்ட ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடிக்கும் போது நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். சில நாட்களுக்கு பிறகு இருவருமே தங்களின் காதலை உறுதி செய்தனர்.
சமூக வலைத்தளத்தில் விஜய் வர்மாவிடம் ரசிகை ஒருவர் தமன்னா உடன் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் வர்மா பதில் அளித்துள்ளார்.
வீட்டில் அம்மா கேட்கும் கேள்வியை ரசிகையும் கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கும் என தெரிவித்தார். இதனால் இரண்டு பேரின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |