உடலுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும் தினை பருத்தி பால்: செய்வது எப்படி ?
அன்றாடம் உடல் அளவில் வேலை செய்பவர்களுக்கு அதிக சக்திகள் தேவை. உடற்பயிற்சிகள் செய்பவர்கள் சரியான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வானறான விஷயங்களுக்கு ஏற்றதொரு பானம் எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினையில் அதிக புரதச்சத்தும் மாவுச்சத்தும் நிறைந்து உள்ளது. இந்த தினையை வைத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தினை அரிசி மாவு- 50 கிராம்
- பருத்தி விதை- 200 கிராம்
- கருப்பட்டி- 150 கிராம்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய்தூள்- சிறிது
- சுக்குத் தூள்- சிறிது
செய்யும் முறை
பருத்தி விதையை 10 முதல் 12 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். அதை நன்றாக அலசி எடுத்து கொள்ளுங்கள்.
அதில் உள்ள பஞ்சுகள் அனைத்தும் நன்றாக நீக்கி சுத்தமாக எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை நன்றாக அரைத்து பால் பிளிந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்த கொள்ள வேண்டும்.
அதனுடன் தினை பருத்தி பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நெருப்பு அதிகம் போடாமல் குறைத்து வைக்க வேண்டும். இதை 3 நிமிடம் கிளற வேண்டும்.
பின்னர் ஏலக்காய் தூள், சுக்குத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தூவி இறக்கினால் தினை பருத்தி பால் தயார்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது அரை மணிநேரத்திற்கு முன்பு இந்த தினை பருத்தி பாலை குடித்து வந்தால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.