நான் 20 வயதில் திருமணமே செய்திருக்ககூடாது.. உண்மையை உடைத்த நடிகை ரேவதி!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ரேவதி. இவர் ஆண் பாவம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நேரத்தில் ரேவதி நடிகர் சுரேஷ் மேனனை காதலித்து 1988-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2002இல் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி திருமணம் செய்ததை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன்.
அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் வருத்தப்பட்டேன். அப்போது புன்னகை மன்னன் படம் வந்த நேரம் அது.
இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அப்புறம் உணர்ந்தேன். நான் நடிப்பதற்கு கொஞ்சம் பதற்றப்பட்டது சிவாஜியுடன் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில்தான்.
அது ஒரு பாடல் காட்சி. அவர் கால்களை தொட்டு வணங்குவது போல் காட்சி. சிவாஜியுடன் நடிப்பதற்கு பதற்றப்பட்டது உண்மை அப்போது சக போட்டியாளர் என்றால் பூர்ணிமா பாக்யராஜ் தான்.
அது செல்போன் வராத காலம். பூர்ணிமாவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.
என் நடிப்பை பாராட்டி அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க முடியாது என்று ரேவதி பேசியுள்ளார்.