பெண் கூறிய ஆசை வார்த்தை... மயங்கிய 3 ஆண்களின் பரிதாபநிலை! வலைவீசி தேடும் பொலிசார்
ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தினை கைப்பற்றிய பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார்(29). தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இவரிடம், பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக சுகாசினி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
பின்பு குறித்த நபருடன் நெருக்கமாக பழகி அவரைக் காதல் வலையில் வீழ்த்தியதோடு, தான் பெற்றோர் இல்லாத அனாதை பெண் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துள்ளார்.
சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை வாங்கி கொடுத்ததுள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி இரண்டு கட்டமாக 6 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி சுனிலிடம் இருந்து தங்களுக்கு தெரியாமல் பணம் பெற்றதை குறித்து, சுனிலின் பெற்றோர் சுகாசினியிடம் பணத்தை என்ன செய்தாய் என்று கேட்ட பின்பு, எஸ்கேப் ஆகியுள்ளார்.
பின்பு சுகாசினியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரைக் கண்டுபிடிக்கவில்லை. பின்பு அவரது ஆதார் முகவரியை வைத்து தேடிய போது சுனில்குமாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செய்து ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இதற்கிடையில், சுனிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்ட சுகாசினி , தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும், பொலிசாரை நாடினால் வீணாக பிரச்சினை வரும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.
வெங்கடேசை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி மேலும் சுனிலுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பின்பு பொலிசாரிடம் சென்று புகார் கொடுத்ததின் பெயரில், வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணையின் போது, குறித்த பெண் வெவ்வேறு பெயர்களை இதுபோன்று மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், பணம் நகைகளை எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியதும் தெரிந்துள்ளது.
முதல் இரு கணவர்களுக்கும் இரு பெண்குழந்தைகளை பெற்றுக் கொடுத்து விட்டு தப்பியுள்ளதால், இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கை இழந்து உள்ளார்களா என்பது குறித்தும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
