அட்டகாசமான சுவையில் கல்யாண வீட்டு ஸ்பெஷல் தக்காளி கூட்டு: ரெசிபி இதோ
வீட்டில் சமைப்பதை விட சாம்பார், ரசம், கூட்டு போன்ற உணவுகள் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் சமைப்பது சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும்.
பலருக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சமைக்கும் உணவுகளில் சுவை பிடித்துவிடும்.
அந்தவகையில் இந்த கல்யாண வீட்டு ஸ்பெஷல் தக்காளி கூட்டு அதே சுவையில் எப்படி செய்வது இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி- 1/2 kg
- பச்சை மிளகாய்- 4
- வெங்காயம்- 1
- பாசி பருப்பு- 50g
- சாம்பார் பொடி- 1/2 ஸ்பூன்
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பை கழுவி 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய், கடுகு, சோம்பு சேர்த்ததும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கி அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பின் தக்காளியை சேர்த்து தொடர்ந்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
தொடர்ந்து இதில் மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி, சேர்த்து இதை கிளரவும்.
அடுத்து வேக வைத்த பருப்பை, இதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி கூட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |