தாலி கட்டி முடிந்த கையோடு மணமகனை அறைந்த புதுமனைவி! ரணகளமான கல்யாண வீடு
புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர் மணமேடையில் சண்டைப்பிடித்துக்கொண்ட நிகழ்வு தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சி, சண்டை, குதூகலம் எல்லாம் சேர்ந்து ஒரு பண்டிகை போல கொண்டாடுவது வழக்கம். இப்படியெல்லாம் இருந்தால் தான் அது திருமணம்.
இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று திருமணமான சில நிமிடங்களிலே இப்படி அடித்துக் கொள்வதா என பார்ப்போரை சிரிக்க வைக்கும் நிகழ்வொன்று நடந்துள்ளது.
மாற்றி மாற்றி அடித்துக்கொண்ட தம்பதியினர்
புதிதாக மணமுடித்த தம்பதியர் இருவரும் இனிப்பு ஊட்டிவிடும் போது மணமேடையிலேயே வைத்து அடித்துக்கொண்டுள்ளனர்.
கணவர் தன்னை இனிப்பு உண்ண வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் மனைவி அறைந்தார். இதனால் பதிலுக்கு கணவனும் அறைந்துள்ளார், இவ்வாறு இருவரும் மாறிமாறி அடித்துக்கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு இவர்களை வாழ்த்த வந்த விருந்தினர்கள் எவ்வளவு முயற்சி செய்து தடுத்துப்பார்த்தும் அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தமுடியவில்லை. இதனால் திருமணமே சண்டைக்காட்சி போல மாறியது.
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.