திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் உங்க நட்சத்திரம்?
ஜோதிடம் என்பது மிக விரிவான பரந்த ஞானத்தை உள்ளடக்கியது. இது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சாஸ்திரம். ஒருவரின் பிறப்பின் போது உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறு ஒருவரின் வாழ்க்கைப் பயணம் இதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
ஒருவருக்கு வாழ்க்கையில் வரவிருக்கின்ற பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுவது, முன்வினை கர்மாவினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கான பரிகாரங்கள் என்ன, எந்தச் செயலை எந்த நேரத்தில் வெற்றி கிட்டும் என்பது போன்ற பல தீர்வுகளை இந்த ஜோதிடம் வழங்குகிறது.
இந்த ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானது நட்சத்திரம். பொதுவாக கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது.
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ, அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரங்கள் இதற்கு 27 உள்ளன. அந்த வகையில் திருமணப்பொருத்தம் பார்க்கும் போது எந்த நட்திரங்கள் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூலம்
- கேது பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றான மூலம் நட்சத்திரத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனம் தேவை.
- தேர்வு செய்யும் வரனை சரியான படி தேர்வு செய்யவில்லை என்றால் பல பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- இந்த நட்சத்திரத்தில் உள்ளவர்களை திருமண வாழ்கை வேண்டாம் என்ற சூழ்நிலைக்கு அழைத்து செல்லும்.
- தான் என்கிற கர்வத்தை அதிகம் தரக்கூடிய நட்சத்திரம் ஆக உள்ள மூலம் நட்சத்திரக்காரர்கள் உள்ளனர்.
- இதனால் வாழ்கை துணையை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பரணி
- பரணி நட்சத்திரம் செவ்வாய் வீட்டில் உள்ளது.
- செவ்வாய், சுக்கிரன் தொடர்பு என்பது நல்ல குணத்தை கெடுக்கும்.
- அதிக கோபத்திற்கு ஆளாகும் நட்சத்திரமாக பரணி நட்சத்திரம் உள்ளது.
- இதனால் இவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதால் திருமண பொருத்தம் கவனமாக இருப்பது அவசியம்.
- இவர்களுக்கு சரியான பொருத்தம் பார்ப்பது மிகமிக முக்கியம்.
கார்திகை
- சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்றான கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- சூரியன் என்பது தான் என்ற எண்ணம், தலைமை பதவி, அகம்பாவம், கர்வம், விட்டுக் கொடுக்காத தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
- இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிபணிந்து செல்லும் எண்ணம் ஒருபோதும் இருக்காது.
- இதனால் இவர்களை அனுசரித்து செல்லும் வாழ்கை துணை இருப்பது அவசியம்.
- இவர்களை போல குணம் கொண்டவர்களை துணையாக தேர்ந்தெடுத்தால் அது பல சிக்கலை கொண்டு வரும்.
அஸ்தம்
- சந்திரனின் நட்சத்திரமாக அஸ்தம் நட்சத்திரம் உள்ளது.
- இந்த நட்சத்திரகாரர்கள் மனக்கசப்பு, பிரிவுகள், சங்கடம், குணக்கேடுகள் அதிம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- இதனால் பொருத்தம் பார்ப்பதில் கவனம் அவசியம்.
- இவர்களுக்கு மிகவும் அமைதியான பொறுமையுடன் இருக்கும் துணை பார்ப்பது அவசியம்.
அவிட்டம்
- செவ்வாய் ஆக்ரோஷம் மிக்க கிரகம் ஆகும்.
- அவிட்டம் நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரம் ஆக உள்ளது.
- துணிச்சல், ஆக்ரோஷம், கோபம் ஆகியவை அவிட்டம் நட்சத்திரத்திற்கு சில சிக்கல்களை கொடுக்கும்.
- இவர்களுக்கு அமையும் திருமண வாழ்கை துணை இவர்களின் வேகம் மற்றும் கோபத்தை தடை போடுபவர்களாக இருக்க வேண்டும்.
- துணையை சரியாக தேர்ந்தெடுக்கும் போது தான் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
விசாகம்
- குரு பகவானின் விசாகம் நட்சத்திரம் ஆனது சுக்கிரன், செவ்வாய் வீடுகளில் உள்ளது.
- இவர்களின் பொறுமை, சகிப்புத் தன்மை உடன் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் நிறைந்த நட்சத்திரமாக இருப்பார்கள்.
- ஆனாலும் இவர்களை அனுசரித்து செல்லும் வாழ்கை துணைக்கு ஏற்ற பொருத்தத்தை பார்ப்பது நன்று.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வித்தியாசமான குணம் கொண்டவர்கள்.
- இவர்களின் துணை இவர்களின் குணத்தை ஏற்று நடப்பது போல் பார்த்தால் இவர்கள் நிதி நிலமையில் முன்னேறி செல்வார்கள்.
அனுஷம்
- சனிபகவானின் நட்சத்திரம் ஆன அனுஷம் நட்சத்திரம் ஆனது செவ்வாய் வீட்டில் உள்ளது.
- இதனால் யார் பெரியவர் என்ற ஆளுமை திறன் இவர்களுக்கு வெளிப்படும்.
- இவர்களுக்கு ஜாதக கட்டங்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்துவது வாழ்வியல் சிறப்புகளை பெற்றுத் தரும்.
- இவர்களின் துணை இவர்களை எப்போதும் அமிழ்ச்சியாக வைத்திருக்கும் குணம் கொண்டவராக இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).