எதிர்பாராத சரிவை கண்ட சென்செக்ஸ்... கதறிய முதலீட்டாளர்கள்!
இந்திய பங்கு சந்தையானது கடந்த நாட்களாகவே தொடர்ந்து சரிவினை கண்டு வருகிறது. அதன்படி, கடந்த நாட்களில் தொடக்கத்திலேயே பெரும் சரிவினை கண்டுள்ளது.1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ், இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகின்றது.
அதிலும், குறிப்பாக 2.17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1954 புள்ளிகள் அல்லது 3.31% வீழ்ச்சி கண்டு 57,082.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 492.80 புள்ளிகள் அல்லது 3.3% சரிவினைக் கண்டு, 17022.75 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
2.46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1918.54 புள்ளிகள் அல்லது 3.25% குறைந்து, 57,118.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 576.5 புள்ளிகள் அல்லது 3.27% குறைந்து, 17040.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதன்படி, இன்றைய நிலவரப்படி, 57,491.51 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,158.63 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 366.64 புள்ளிகள் அதிகரித்து 57,858.15 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல், 17,149.10 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,001.55 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 17,277.95 புள்ளிகளுடன் நிலைபெற்றது.