ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அடுத்த வெளிநாட்டு வீரர் - சிக்கலில் லக்னோ அணி!
ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு புதிதாக இணைந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகளுடன் விளையாட இருக்கிறது.
இந்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே பல நட்சத்திர வீரர்கள் காயமாகி தொடரை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு அணிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்.

ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் போது வலது கையில் காயமடைந்தார்.
தொடர்ந்து அவர் காயத்திற்கான பரிசோதனை எடுத்துக் கொண்டபோது அவருக்கு இந்த காயம் பெரியதாக உள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் இந்த பதினைந்தாவது ஐபிஎல் சீசனில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.