கீரை இரவில் சாப்பிட்டால் விஷமா? புளிய மரத்தில் பேய்! பலருக்கும் தெரிந்திடாத உண்மை
நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பல வாசகங்கள் கூறுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம். உதாரணமாக இரவு நேரத்தில் கீரை சாப்பிடக்கூடாது, புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் என்றெல்லாம் கூறுவார்கள்.
அதற்கான அர்த்தம் நமக்கு புரியாமல் அதனை பின்பற்றாமலே பல சிக்கல்களை சந்திப்பதும் தற்போது நிகழ்கின்றது. இதற்கான அர்த்தம் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால் விஷமா?
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப்படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும்.
புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால் கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். அதுமட்டுமின்றி, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்
தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக்கூடாது என்று கூறுவார்கள்.
வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது.
வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது
'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதனாலேயே அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.