பிரபல இயக்குனரை காதலித்து வாழ்க்கையை இழந்த நடிகை: உண்மைகளை வெளியிட்டு குமுறிய கொடுமை
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்த நடிகை மந்த்ராவின் வாழ்க்கை பிரபல இயக்குனரால் திசைமாறி சென்றுள்ளதை தற்போது குமுறலுடன் கூறியுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வர வேண்டிய நடிகை மந்த்ரா இரண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்து சினிமாவை முடித்துள்ளார்.
எஸ்எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மந்த்ரா சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற படங்களில் ஆண்ட்டி வேடங்களில் நடித்திருந்தார்.
மந்த்ராவின் சினிமா வாழ்க்கையை பிரபல இயக்குனர் ஒருவர் வேட்டையாடியது பலருக்கும் தெரிந்திடாத ஒன்றாகும். கடந்த 2003ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான நிஜம் திரைப்படத்தில், வில்லன் நடிகர் கோபிசந்துக்கு மனைவியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்கியவர் தேஜா. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததும் மந்திராவை முன்னணி நடிகையாக மாற்றுகிறேன் எனக் கூறி அவருடன் பழகி வந்ததும் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் மகேஷ் பாபு படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கிறேன் என்று கூறியதோடு, வில்லன் நடிகருடன் கர்ச்சியாக நெருங்கி நடிக்கவும் கூறி தனது கேரியரையே காலி செய்துள்ளதாக புலம்பியுள்ளார்.
மேலும் குறித்த இயக்குனரின் மீது இருந்த நம்பிக்கையினால் அவர் கூறியதை அப்படியே செய்ததை நினைத்து தற்போது வருத்தப்பட்டுள்ளார்.