திடீரென உயிரிழந்த மகன் மனோஜ்... கண்ணீரில் பாரதிராஜா! அதிர்ச்சியில் திரையுலகம்
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா சற்று முன் மாரடைப்பால் காலமானார்.
மனோஜ் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்(48) மாரடைப்பால் இன்று காலமானார். அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்பு தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் மட்டுமின்றி கடந்த 2023ம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இன்று அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
