ஒரு கிலோ டீ தூளின் விலை ரூ 2.64 லட்சம்! அப்படி என்ன ஸ்பெஷல்?
அரியவகை டீத்தூளாக கூறப்படும் மனோகரி கோல்ட் தேயிலை(Manohari Gold Tea) ஒரு கிலோ இலங்கை மதிப்பின் படி ரூ2.64 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
இந்தியாவின் அஸ்ஸாம் தேயிலை தோட்டத்தில் பயிராகும் அரியவகை டீத்தூளே மனோகரி கோல்ட், இது தங்க இலை சருகு போன்று இருப்பதால் இதற்கு தனிச்சிறப்பு.
இது விளைவதற்கு சரியான சீதோஷ்ண நிலை வேண்டும், மேலும் சிறிய மொட்டிகளில் இருந்து பெறப்படும் டீத்தூள் என்பதால் இதனை தயாரிப்பது சற்று சிரமம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் இலங்கை மதிப்பின் படி ரூ.2.64 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளதாம், இதுவரையிலும் நடந்த பொது ஏலத்தில் இந்த ஆண்டுக்கான மதிப்பே அதிகம் என கூறப்படுகிறது.
இந்த வகையான டீத்தூளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், இதனை அதிகளவு உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக வடகிழக்கு தேயிலை சங்கத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறு, குறு தொழிலாளர்கள் பலனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
