மனோபாலா உடலைப் பார்த்து தேம்பி அழுத சித்தார்த் - நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!
மறைந்த இயக்குநர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மனோபாலா காலமானார்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல இயக்குநராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர் இயக்குநர் மனோபாலா. இவர் தமிழ்சினிமாவில் தாய்மாமன், தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால் உட்பட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் மனோபாலா நடித்துள்ளார். அதுவும் ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா’ படத்திலும் தன்னுடைய நகைச்சுவையால் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சிறு நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இயக்குநர் மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தி சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் சினிமாத் துறையினரும், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோபாலாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேம்பி அழுத சித்தார்த்
மனோபாலாவின் வீட்டிற்கு சென்று நடிகர், நடிகைகள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோபாலாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சித்தார்த், மனோபாலாவின் உடலைப் பார்த்து கதறி, கதறி அழுதார். இவர் அழுவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நெஞ்சம் சற்றே கணத்து விட்டது.
நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்
இந்நிலையில், இயக்குநர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thalapathy Vijay paid his last respect to Manobala. pic.twitter.com/Gxz6uue3DK
— LetsCinema (@letscinema) May 3, 2023
Thalapathy Vijay Paying his last respect to Manobala ??? #RIPManobala pic.twitter.com/jqEuewtfem
— Arun Vijay (@AVinthehousee) May 3, 2023