காற்றோடு கலந்தது நடிகர் மனோபாலாவின் உடல்: சோகத்தில் திரையுலகினர்
தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் நடிகராகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் மனோபாலா.
இவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் காலமானார்.
image - ABP Nadu - ABP News
அவரது மரணத்துக்கு திரையுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இதையடுத்து மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
image - india posts english
இந்நிலையில் நடிகர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழில் 700 படங்களுக்கு மேலாக நடித்துள்ள மனோபாலா 20 படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் சாதிக்கத் துடிக்கும் பல பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இவர் சினிமாத் துறையில் மாத்திரமல்ல நிஜ வாழ்விலும் சிறந்த மனிதராக விளங்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.