மஞ்சிமாவின் ஹனிமூன் ப்ளான்! கெளதம் கார்த்திக் எடுத்த முக்கிய முடிவு... என்ன தெரியுமா?
கெளதம் கார்த்திக் படப்பிடிப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருவதால் நடிகை மஞ்சிமா மோகன் ஹனிமூனிற்கு எங்கு செல்வது என்ற திட்டத்தினை மாற்றியுள்ளாராம்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 28ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் ரசிகர்கள் பலரும் ஹனிமூனுக்கு எங்கு செல்லுகின்றீர்கள் என்று புது ஜோடியிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
மஞ்சிமாவின் ஹனிமூன் ப்ளேன்!
இந்த நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் ஹனிமூன் குறித்து பதில் கொடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் போது ஹனிமூன் செல்ல திட்டமிட்டிருக்கின்றார்களாம்.
கௌதம் கார்த்திக்கின் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இருப்பதால் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் ஹனிமூனுக்கு எங்கு செல்வது என்பது குறித்து திட்டமிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.