நடிகர் மணிவண்ணன் மரணத்திற்கு காரணம் என்ன? 10 ஆண்டுக்கு பின்பு தங்கை உடைத்த உண்மை
இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் மரணத்திற்கு உண்மை காரணம் என்ன என்பதை அவரது சகோதரி கூறியுள்ளார்.
நடிகர் மணிவண்ணன்
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்த மணிவண்ணன், தனது சொந்த ஊரில் ஆரம்பகால படிப்பை முடித்து பின்பு மேல் படிப்பிற்கு MA ஆங்கிலத்தை தெரிவு செய்தார்.
இவர் இந்த படிப்பை தேர்வு செய்ய காரணம் அவரின் நண்பரும் நடிகருமான சத்யராஜ் எனறு கூறப்படுகிறது. தமிழ் வழி கல்வியை பயின்ற இவருக்கு ஆங்கிலம் மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது
மேடையில் சேக்ஸ் பியரைப் பற்றிய நாடகத்தில் நடித்த போது ஆங்கிலம் சரியாக உச்சரிக்க வராததால் சக மாணவர்களால் கிண்டலுக்கு ஆளான இவர் பாதியிலேயே மேற்படிப்பை நிறுத்திவிட்டார்.
பின்னர் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாரதிராஜாவிற்கு நூறு பக்க கடிதத்தினை எழுதியது இவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆம் 1980லிருந்து 82 வரை அவர் இயக்கும் படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதினார். பின்பு சிறந்த உதவிய இயக்குனராக உருவெடுத்து, பல வெற்றி படங்களை கொடுத்தார்.
இயக்குனர் என்பதையும் தாண்டி நடிகராகவும் கலக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமானார். பின்பு படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு முழுவதுமாக நடிப்பில் கவனம் செலுத்தினார்.
பின்னர் 2013ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திற்கு அவரது குடிப்பழக்கம் காரணம் என்று கூறப்பட்டது.
தங்கை கூறிய உண்மை
இதுவரை குடிப்பழக்கத்தால் இறந்துவிட்டதாக நினைத்த ரசிகர்களுக்கு அவரது தங்கை 10 ஆண்டுகளுக்கு பின்பு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளார்.
தனது அண்ணன் அண்ணானாக மட்டுமில்லாமல் பெற்றோராக இருந்து பார்த்துக் கொண்டதுடன், அவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுப்பார். எனது அண்ணன் போன்று தான் தனது அண்ணியும் தன்னை ஒரு மகள் போன்று தான் பார்த்தனர்.
எனது அண்ணன் குடியால் இறக்கவில்லை. அவரது இறப்பிற்கு பல மாதங்கள் முன்பே குடியை நிறுத்திவிட்டார். தனது அம்மா இறந்த துக்கத்தின் போது கூட தனது அண்ணன் குடிக்கவில்லை.
முதன்முறையாக கேர்ள் ப்ரெண்டை அறிமுகம் செய்த பிக்பாஸ் பிரதீப்... சுரேஷ் தாத்தாவுடன் மாஸ் செய்த காட்சி
தனது அண்ணிக்கு புற்றுநோய் இருப்பது அண்ணனுக்கு தெரியவந்தது. அதுவும் கடைசி கட்டத்தில் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்ததால், இதனை யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
அவர் கடைசியாக கொடுத்த பேட்டியில் கூட கால் இடறி விழுந்து அடிப்பட்டு விட்டதால், இரண்டு மாதம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதன் பின்புதான் உயிரிழந்தார்.
அண்ணன் இறந்த சில மாதங்களிலேயே அண்ணியும் இறந்துவிட்டதாக மணிவண்ணன் தங்கை கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |