உடல் எடை வேகமாக குறைக்க உதவுமா மாம்பழம்?
மாம்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, சி, இ, பி5, கே மற்றும் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
இது பலவகையான உடல் நல பிரச்சினைகளை சரி செய்கின்றது. குறி்ப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது இது எப்படி உதவுகின்றது? எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி உதவுகின்றது?
மாம்பழத்தில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் கொழுப்பு செல்கள் மற்றும் கொழுப்பு தொடர்பான மரபணுக்களை அடக்கி, உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவது உடல் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதேநேரம் அதிகப்படியான மாம்பழ நுகர்வு எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம்.
எப்போது சாப்பிட வேண்டும்?
நடைபயிற்சி, நீச்சல் அல்லது கார்டியோ அமர்வுக்கு செல்வதற்கு முன், உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியாக மாம்பழத்தை சாப்பிடலாம். இது சுக்ரோஸின் நல்ல மூலமாகும். உடற்பயிற்சிக்கு பின்னரும் மாம்பழத்தை சாப்பிடலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
மாம்பழத்தை ஜூஸாக செய்து சாப்பிடுவது, நார்ச்சத்தை நீக்கி, குறைவான சத்தானதாகவும், நிறைவாகவும் இருக்கும். அதனால், மாம்பழங்களை அப்படியே முழுவதுமாக சாப்பிடுங்கள்.
உங்கள் வயிற்றை நிரப்பும் சிற்றுண்டியாகப் பயன்படுத்துங்கள். மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைப்பது நல்லது. இது மாம்பழத்தில் உள்ள ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது.
