Mango rasam: நாவூறும் சுவையில் மாங்காய் ரசம்- வீட்டிலேயே செய்வது எப்படி? குழந்தைகளின் Favorite
கோடை காலம் வந்து விட்டால் மாங்களுக்கு பஞ்சமே இருக்காது. சந்தைகள், தெருக்களில் உள்ள கடைகள் என அனைத்து இடங்களிலும் மாங்காய்கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.
உணவியல் நிபுணரின் கருத்தின்படி, வெயில் காலத்தில் கிடைக்கும் பச்சை மாங்காய் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதே போன்று நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மாங்காயை வைத்து மாங்காய் ஊறுகாய், மாங்காய் சாம்பார், மாங்காய் வத்தல், மாங்காய் பச்சடி, வடு மாங்காய் உள்ளிட்ட பல ரெசிபி செய்யலாம்.
அந்த வரிசையில் ஒன்று தான் மாங்காய் ரசம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரசத்திற்கு புளி, தக்காளி என்று எதுவுமே தேவையில்லை.மாறாக மாங்காய் இவை அனைத்திற்கு ஈடான சுவையை தரும்.
அந்த வகையில், மாங்காய் ரசம் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மாங்காய் ரசம்
தேவையான பொருட்கள்
- மாங்காய் - 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 துண்டு
- ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்
- தண்ணீர் - 3/4 கப்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- வரமிளகாய் - 3
- பூண்டு - 5 பல்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
- ரசப்பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 3 கப்
- உப்பு - தேவையான அளவு
ரசம் செய்வது எப்படி?
முதலில் மாங்காயின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து தண்ணீர், மஞ்சள் தூள், மாங்காய், ஊற வைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், சிறியதாக நறுக்கிய இஞ்சி ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு விசில் விட்டு இறக்கவும்.
வெந்தவுடன் பருப்பையும், மாங்காயையும் மசித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
கடைசியாக ரசப்பொடியை சேர்த்து அதனுடன் மாங்காய் கலவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடாமல் நுரைத்து வந்தவுடன் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |